சிலைபோல் மாறி, கொள்ளை அழகில் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்! செம புகைப்படம்!



Kajal agarwal new look like statue photo goes viral

இயக்குனர் பேரரசு இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். இன்று தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என பல்வேறு பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் காஜல்.

தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துவருகிறார் காஜல். மேலும் பாரிஸ் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் ஒரு காட்சி வெளியாகி வைரலானது.

kajal agarwal

மேலும் தனது சமூக வலைதல்பக்கத்தில் அவ்வப்போது தனது வித்தியாசமான புகைப்படங்களை காஜல் அகர்வால் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் காஜல் அகர்வால் படப்பிடிப்பில் ஒரு செட்டில், சிலை போல் நின்று போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது. புகைப்படம் இதோ..

kajal agarwal