மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எமோஷனலான பதிவுடன், முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால்! குவியும் லைக்ஸ்கள்!!
தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, பின் விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருந்தார். காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்துக் கொண்டார். அதனை தொடர்ந்தும் பல படங்களில் நடிக்க கமிட்டான அவர் கர்ப்பமடைந்த நிலையில் ஒவ்வொரு படத்திலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலுக்கு அண்மையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அதில், எதிர்காலத்தில் ஒரு தாயாக நான் நிறைய விஷயங்களை உனக்கு கற்று தரவுள்ளேன். ஆனால் நீ எனக்கு தாயாக இருப்பது குறித்து கற்று தந்துள்ளாய்.
மேலும் என் இதயத்தின் ஒரு பகுதி என் உடலுக்கு வெளியே இருக்கிறது என்பதை நீ உணர வைத்துள்ளார். நீ என் சிறிய இளவரசன், நீங்கள்தான் என் சூரியன், என் சந்திரன், என் நட்சத்திரங்கள். அதனை என்றும் மறந்து விடாதீர்கள் என மிகவும் உருக்கமாக நீண்ட பதிவினையும் வெளியிட்டுள்ளார்.