சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
அட.. கட்டப்பாவாக மாறிய காஜல்! பாகுபலி மகனை வைத்து செய்த காரியத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகை காஜல் கடந்த 2020ல் தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது நீல் என்ற அழகிய ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காஜல் தனது மகனுடன் பாகுபலி கட்டப்பா பாணியில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது காஜல் தனது மகனின் காலை தனது தலை மீது வைத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து, ராஜமவுலி சார்.. இது உங்களுக்காக. நீல் மற்றும் எனது அர்ப்பணிப்பு. நாங்கள் எப்படி முடியாது என கூற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.