#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலர் தினத்தில் ரசிகைகளுக்கு 'ஷாக்' கொடுத்த காளிதாஸ் ஜெயராம்!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயராம். இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இவருக்கு காளிதாஸ் ஜெயராம் மற்றும் பார்வதி ஜெயராம் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் காளிதாஸ் ஜெயராம் தமிழ் மற்றும் மலையாள சினிமா திரையில் நடித்து வருகிறார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக 2000 ஆம் ஆண்டு வெளியான கொச்சி கொச்சி சந்தோசங்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பூ மரம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் கதாநாயகனாக தன்னை அறிமுகம் செய்தார்.
சுதா கொங்காரா இயக்கிய பாவ கதைகள் என்ற தொடரில் சத்தார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் பாராட்டையும் பெற்றவர். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற விக்ரம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் இந்தியாவின் பிரபல மாடல் அழகியான தாரணி காளிங்கராயர் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி கிசுகிசுவை ஏற்படுத்தின. இந்நிலையில், சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு காளிதாஸ் ஜெயராம் தாரணி காளிங்கராயர் உடனான தன்னுடைய காதலை உலகிற்கு அறிவித்துள்ளார். அதில் காளிதாஸ் ஜெயராம், "நான் இனி சிங்கிள் இல்லை" என்ற வாசகத்துடன் அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறி இருக்கிறார்.