"பிடிக்கலைனா சொல்லிறனும்., அது பிரன்ஷிப் இல்ல" - விஷால் குறித்து கூறிய தர்ஷிகா.!!
விஜயின் படத்தில் கமல் நடித்திருக்கிறாரா.! வைரல் புகைப்படத்தால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். "இளைய தளபதி" விஜய் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜய், தற்போது "தளபதி" விஜய் என்று அழைக்கப்படுகிறார். தற்போது பல மெகா ஹிட் படங்களை கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக உள்ளார்.
கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட விஜயின் ஆரம்பகாலப் படங்கள் பெரியளவில் போகாமல், தோல்வியையே சந்தித்தன. விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த "பூவே உனக்காக" தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இறுதியாக விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியான "வாரிசு" படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது 2000ம் ஆண்டு விஜய், ஜோதிகா நடித்து எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான "குஷி" படத்தின் அன்சீன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.
அதில் ஒரு புகைப்படத்தில் கமலஹாசனும் இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், குஷி படத்தில் கமலும் நடித்தாரா? என்று கேட்டு வருகின்றனர். ஆனால் அது கமல் குஷி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற போது எடுத்த படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.