மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமலஹாசன் மற்றும் சிம்புவின் திடீர் சந்திப்பு.. வெளியான புகைப்படங்களால் பரபரப்பு.?
கோலிவுட் திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிம்பு. சமீபத்தில் சிம்புவை சுற்றி பல சர்ச்சைகள் தொடர்ந்து வெளியாகின. இதனையடுத்த சில காலமாக திரைப்படங்கள் நடிக்காமல் இருந்த சிம்பு இதன் பிறகு 'மாநாடு' திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.
மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சிம்பு மீண்டும் ரசிகர்களின் மனதை கவர்ந்து உள்ளார். தற்போது கமலஹாசன தயாரிப்பில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இப்படத்திற்கு கதாநாயகியாக தீபிகா படுகோனை ஒப்பந்தம் செய்ய படக்குழு பேசி வந்தது. ஆனால் தீபிகா படுகோனின் சம்பளம் ஒத்து வராததால் கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நிலையில், கமலஹாசன் மற்றும் சிம்பு இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இவர்களின் திடீர் சந்திப்பிற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.