காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
என் அன்பு காதலி... பிரபல நடிகையுடனான காதல்.! உணர்ச்சிகரமாக பேசிய உலகநாயகன்.! தீயாய் பரவும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல். இவரும் நடிகை ஸ்ரீவித்யாவும் காதலித்தது குறித்த தகவல்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ரீவித்யா கமலுடனான காதல் குறித்து பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலானது.
அதில் அவர் நானும் கமல்ஹாசனும் காதலித்தது சினிமாத்துறையில் பலருக்கும் தெரியும். ஆரம்பத்தில் இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்தார்கள். பின்னர் தனது அம்மா கமல்ஹாசனை அழைத்து, நீங்கள் இருவரும் தற்போது நல்ல நடிகர்களாக இருப்பதால் இப்போது திருமணம் செய்தால் உங்களது வாழ்க்கை கெட்டுப்போய்விடும் என கூறியதாகவும் அதனால் கோபமடைந்த கமல் தன்னிடம் பேசாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் கொஞ்ச நாளில் கமலுக்கு வேறொருவருடன் திருமணமாகிவிட்டது என்பது தெரிய வந்ததும் நான் உடைந்து போய்விட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து கமலும் தொகுப்பாளினி டிடியின் பேட்டி ஒன்றில் ஸ்ரீவித்யா குறித்து பேசியது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஸ்ரீவித்யாவுடன் நடித்த காட்சியை காட்டி கேட்க நடிகர் கமல், அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு 19 வயது. நான் திறமையானவன் என்பதை நன்கு உணர்ந்து எனக்கு உணர்த்தியதே ஸ்ரீவித்யாதான்.அவர் என் தோழி மட்டுமில்ல என் அன்பு காதலி, அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது கல்யாணத்தில்தான் முடியணும் என்றெல்லாம் அவசியம் இல்லை. அந்த காதல் அப்படியே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.
He himself said it too.. கல்யாணத்தில் முடியாத்தால என்னவோ அந்த காதல் கடைசி வரை இருந்தது..😍❤️.. can feel his love ❤️ https://t.co/JflcOoB2pt pic.twitter.com/ZCjDw6fxfR
— இளவேனில் (@annonymikkame) December 31, 2023