மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லைஃப் டைம் செட்டில்மெண்ட்! கைப்பட கமல் எழுதிய கடிதம்! செம ஹேப்பியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலின் தீவிர ரசிகர் ஆவார். இந்த நிலையில் நடிகர் கமல் இயக்குநரும், தனது ரசிகருமான லோகேஷ் கனகராஜ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை லோகேஷ் கனகராஜ் லைப்டைம் செட்டில்மெண்ட் என தனது ட்விட்டர் பக்கத்தில் செம ஹேப்பியாக பகிர்ந்துள்ளார்.
அந்த கடிதத்தில் நடிகர் கமல், அன்பு லோகேஷ் பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலே நான் எடுத்துக் கொண்டு விட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும். பொதுவெளியில்.
“Life time settlement letter”
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 6, 2022
Words can’t express how emotional I’m feeling reading this!
Nandri Andavarey @ikamalhaasan 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/5yF4UnGnVj
என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதைவிட அதிகம்.
உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம் யூடியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களையும் எடுத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள்.
அயராது...விழித்திருங்கள் தனித்திருங்கள் பசித்திருங்கள் உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும் உங்கள் நான் கமல்ஹாசன்.