#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ராகவா லாரன்ஸ், ஓவியா மிரட்டும் காஞ்சனா 3 படத்தின் புது அப்டேட்! இதோ!
தமிழில், தெலுங்கு என பிரபலமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்துவைத்த இவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார்.
நடிப்பையும் தாண்டி படங்களையும் இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். பலவருடங்களுக்கு முன்பு இவர் இயக்கிய முனி படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ்.
தற்போது காஞ்சனா 3 படத்தை இயக்கி அதில் நடித்தும் வருகிறார் லாரன்ஸ். படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபீர் சிங், மனோ பாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி என பலர் நடித்துள்ளனர்.
காஞ்சனா 3 படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்ப்புத்தாண்டு ஸ்பெஷலாக வரும் ஏப்ரல் 18 ல் படம் வெளி வருவதாக இருந்தது.
ஆனால் அதற்க்கு முன்பாக அதாவது ஏப்ரல் 12 ல் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.