மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வில்லன்களை ஹீரோ மாதிரி காமிச்சா இதான் நடக்கும்! நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்! நடிகை கங்கனா ஆவேசம்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரியானாவை சேர்ந்த நிகிதா தோமர் என்ற கல்லூரி மாணவி தேர்வு எழுதி விட்டு திரும்பிய நிலையில், டௌசிஃப் மற்றும் ரேஹான் ஆகியோர் அவரை கடத்த முயன்றுள்ளனர். இந்நிலையில் அவர்களிடமிருந்து நிகிதா எதிர்த்துப் போராடிய நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான டௌசிஃப் கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், மிர்ஸாபுர் தொடரைப் பார்த்த பிறகுதான் எனக்கு நிகிதாவை கொலை செய்யும் யோசனை வந்தது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், வெறிகொண்டு தன்னுடன் வாழும்படி வற்புறுத்தியவனுக்கு இணங்காமல் உயிரை விடத் தீர்மானித்த நிகிதாவின் துணிச்சல் ராணி லக்ஷ்மிபாய்,பத்மாவதிக்கு குறைந்ததில்லை.
மேலும் குற்றவாளிகளை கதாநாயர்களாக காட்டும்போது இப்படித்தான் நடக்கும்.மேலும் அழகான ஆண்கள் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது அவர்களை வில்லன்களாக காட்டாமல் எதிரான மற்றொரு நாயகர்களாகவே காட்டுகின்றனர். அதனால்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கின்றது. இவ்வாறு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு பாலிவுட் சினிமா வெட்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.