மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தான் அந்த விஷயத்தை செய்தேன்" மனம் திறந்த கங்கனா ரனாவத்..
இந்தியில் பிரபலமான நடிகையாகவும், சர்ச்சைக்குரிய நடிகையாகவும் இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இவரின் அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக ஒரு சிலர் இவரை திட்டி வந்தாலும் பல ரசிகர்களை தனது நடிப்பு திறமையின் மூலம் கவர்ந்து வருகிறார் கங்கனா. மேலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனக்கென தனி இடத்தை இந்தி சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.
சமீபத்தில் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி2. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கங்கணா. தமிழில் முதன் முதலில் நடித்த திரைப்படம் என்பதால் இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் பாராட்டி வந்தனர். ஆனால் இப்படம் பெரிதும் வெற்றி பெறவில்லை.
இதனை அடுத்து சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், "சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். அப்பொழுது சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் ரயில் நிலையத்தில் தங்கியிருந்தேன். பன், ரொட்டி மட்டும்தான் என்னுடைய உணவு" என்று கூறியிருக்கிறார். இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.