மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது என்னோட கனவு! விறுவிறுப்பாக தாம்தூம் சர்ச்சை நாயகி தொடங்கும் புதிய தொழில்! என்னனு பார்த்தீர்களா!!
தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம்தூம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் கங்கனா தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை கங்கனா, பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து இந்தி நடிகர்களுக்கு போதை பொருள் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் மராட்டிய அரசையும் கண்டித்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் மும்பையில் உள்ள அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் அண்மையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளையும் விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகை கங்கனா தற்போது ஹோட்டல் தொழில் ஒன்றை தொடங்க
திட்டமிட்டுள்ளார். அவர் மணாலியில் புதிதாக ஓட்டல் கட்ட இருக்கிறார் எனவும், அதற்கான இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து கங்கனா, ஹோட்டல் தொடங்குவது எனது கனவு என தெரிவித்துள்ளார்.