அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அடக்கொடுமையே கஞ்சா கருப்புக்கு இப்படி ஒரு கஷ்டமா ? பரிதாப நிலை குறித்து அவரது மனைவி என்ன சொன்னார் தெரியுமா ?
தமிழில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கியவர் நடிகர் கஞ்சாகருப்பு .அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டபிறகு மேலும் பிரபலமானார்.
இவ்வாறு நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் கஞ்சா கருப்பு, வேல்முருகன் போர்வெல் என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.அதன் பிறகு அவருக்கு பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது .
இந்நிலையில் சமீபத்தில் இது குறித்து பேசிய கஞ்சாகருப்பின் மனைவி சங்கீதா, வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரிக்கிற ஐடியா இவருக்கு இல்லை. நீங்கள் கையெழுத்து போட்டா தான் பணம் கிடைக்கும் என சொல்லி பலரும் இவரை ஏமாற்றிவிட்டார் .
மேலும் கஞ்சா கருப்பு படம் தயாரிக்கிற வேளையில் மிகவும் பிசியாக இருப்பார் என எண்ணி படவாய்ப்புகளும் இவருக்கு வரவில்லை .
ஒரு கட்டத்துல நாங்கள் குடியிருக்கிற வீட்டையும் விற்கிற நிலைமைக்கும் வந்துவிட்டோம். பின்னர் வீட்டை அடமானம் வைத்து கடனை அடைக்கலாம் என்று முடிவெடுத்து, அடமானம் மட்டும் வைத்தார் .ஆனால் அதனை இன்னமும் மீட்க முடியவில்லை.
.
ஆனால் முன்பை விட தற்பொழுது நிலைமை பரவாயில்லை, அவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார்.