பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விரைவில் வெளியாகும் காந்தாரா படத்தின் 2ம் பாகம்; முதற்கட்ட பணிகள் தீவிரம்.!
கன்னட மொழியில் உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்திய அளவில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் காந்தாரா.
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூபாய் 500 கோடிக்கு மேல் வசூலும் செய்தது. இந்த படத்தை இயக்குனர் ரிசப் செட்டி இயக்கி நடித்திருந்தார்.
படத்தின் இரண்டாவது பாகம் தயாராகும் என்று இயக்குனர் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் முதற்கட்ட பணிகள் மற்றும் கலைஞர்கள் தேர்வு போன்றவை நடைபெற்று வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு படம் திரைக்கு வரும் என்றும் பட குழு தகவல் தெரிவித்துள்ளது.