ஆர்.கே நகர் நாயகனாக ரவி மோகன்.. 'கராத்தே பாபு' வாக அவதாரம்.! படத்தின் அசத்தல் டீசர் காட்சிகள் வைரல்.!!



  Karathey Babu Movie Title Teaser 

அரசியலில் களமிறங்கியது போல ஜெயம் ரவி, நாசர், கேஎஸ் ரவிக்குமார் நடிக்கும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கணேஷ் கே பாபு இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையில், நடிகர்கள் ரவி மோகன் என்ற ஜெயம் ரவி, சக்தி வாசுதேவன், கேஎஸ் ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், சுப்ரமணியன் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் கராத்தே பாபு (Karathey Babu).

ஆர்.கே நகர் கராத்தே பாபு

  

ஆர்.கே நகரில் நடந்த அரசியல் தொடர்பான கருத்தை முன்வைத்து, சட்டப்பேரவையில் விவாதம் ஒன்று நடப்பது போல வெளியாகியுள்ள படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஸ்கிரீன் மீடியா என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் படம் உருவாகி வருகிறது.

இதையும் படிங்க: பாரதி ராஜாவின் நிறம் மாறும் உலகில் திரைப்படம்; வெளியீடு தேதி அறிவிப்பு.!

அரசியல் புள்ளிகளை மையப்படுத்தும் காட்சிகள்

படத்தின் ஒளிப்பதிவு பணிகளை எழில் அரசும் , எடிட்டிங் பணிகளை கதிரேஷ் அழகேசனும் மேற்கொண்டுள்ளனர். விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள படக்குழு, படத்தின் டீசர் காட்சிகளை அரசியல் சாயத்துடன் வெளியிட்டு இருக்கிறது. இது மறைமுகமாக அரசியல் புள்ளிகளின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டுகின்றன.

இதையும் படிங்க: சசிகுமாரின் நடிப்பில் உருவாகும் அடுத்த படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! முதல் பார்வை இதோ.!