மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. சூப்பர் நியூஸாச்சே! ஹீரோவாக களமிறங்கும் நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்! எதில் தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அவ்வாறு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்ட இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, காவ்யா, குமரன், சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருபவர் குமரன். தொடரில் இவரது எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் சீரியலில் நடித்துவரும் குமரன் அடுத்ததாக வெப்சீரிசில் நடிக்க உள்ளார்.
அதாவது புல்லட் புரபோசல் என்ற வெப்சீரிஸில் குமரன் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி ஹீரோயினாக குமரனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமான அமித்தும் அதில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.