மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பணத்திமிரை என்னிடம் காட்டாதீங்க" - லெஜண்ட் சரவணனை அவமானப்படுத்திய முன்னணி நடிகை..! நடந்தது என்ன?..! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்.!
'தி லெஜன்ட்' படத்தின் ஆடியோ லான்சிற்கு வருவதற்கு மேலும் இரண்டு கோடி தருவதாக கத்ரீனாவிடம் சரவணன் கூறியதால் உங்கள் பணத்திமிரை என்னிடம் காட்டாதீர்கள் என்று அவர் அவமானப்படுத்தியுள்ளார்.
பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு பிரம்மாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் சமீபத்தில் வெளியான நிலையில், அதனை கண்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர்.
இதோடு நிறுத்திக் கொள்ளாமல் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தான் தேர்வு செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியது.
ஆனால், நயன்தாரா இப்படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று நயன்தாரா அவரை அவமானப்படுத்தியதாக திரை வட்டாரங்களில் அரசல்புரசலாக பேசி வருகின்றனர்.
இதன் காரணமாகவே பாலிவுட் நடிகையும், உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் ' தி லெஜண்ட் படத்தில் நடிப்பதற்காக சரவணன் தேர்வு செய்தார்.
ஆனால், பல கோடி சம்பளங்கள் கொடுக்கப்போவதாக கூறியும், அவர் நேரில் கூட பார்ப்பதற்கு ஒப்புக்கொள்ளாததால் நடிகை ஊர்வசியை கதாநாயகியாக புக் செய்துள்ளார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.சமீபத்தில் 'தி லெஜன்ட்' படத்தின் ஆடியோ லான்ச் 10 கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக உருவான நிலையில், அதில் சிறப்பு விருந்தினராக கிட்டத்தட்ட பத்து நடிகைகளுக்கு 6.5 கோடிக்கு மேல் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டது.
இதோடு நிறுத்திக் கொள்ளாமல் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபிற்க்கும் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து சரவணன் புக் செய்துள்ளார். ஆனால் கத்ரினா வருவதாக கூறி, திடீரென பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் லெஜண்ட் சரவணன் மேலும் இரண்டு கோடி தருகிறேன் என கூறியதால், கத்ரினா உங்கள் பணத்திமிரை என்னிடம் காட்டாதீர்கள் என்று அவமானப்படுத்தியதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில், பணத்தை காட்டி நடிகைகளிடம் பேசியதால் இப்படி அவமானம் ஏற்பட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.