மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாமன்னன் திரைப்படத்தை கலாய்த்த காத்து கருப்பு கலை.. உதயநிதி பகிர்ந்த வீடியோ.?
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் தமிழில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் படம் வெளியாகி பலவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் தொடர்ந்து சச்சையான விமர்சனங்களை பெற்று வரும் 'மாமன்னன்' திரைப்படத்திற்கு பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். கமலஹாசன், பா. ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்கள் 'மாமன்னன்' திரைப்படத்தை பெருமையாக பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், பிரபல யு டியுப்பரான காத்து கருப்பு கலையிடம் 'மாமன்னன்' திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர் இந்த திரைப்படத்தில் என்ன நெகட்டிவ்வான விஷயம் என்று கேட்டனர். அதற்கு காத்து கருப்பு கலை முன்னால் இருந்த பெண்மணி தான். முக்கியமான காட்சிகளை பார்க்க விடாமல் செய்துவிட்டார். அது மட்டும் தான் நெகட்டிவான விஷயம் என்று கலாய்த்து பேசினார். இந்த வீடியோவை உதயநிதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
😀@mari_selvaraj @KeerthyOfficial @SonyMusicSouth @arrahman @thenieswar https://t.co/wt8uVfg52z
— Udhay (@Udhaystalin) July 4, 2023