பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஜாதியை குறித்து பரியேறும் பெருமாள் நடிகை ஆனந்தி கூறிய சர்ச்சையான கருத்து..ஷாக்கில் ரசிகர்கள்.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் ஆனந்தி. இவர் 2014 ஆம் வருடம் திரையரங்கில் வெளியான 'பொறியாளன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் பெரிதளவில் ஹிட்டாகவில்லை. இதன் பிறகு இவர் நடித்த 'கயல்' திரைப்படம் ஹிட்டாகி இவரின் நடிப்பு பெருதளவில் பாராட்டப்பட்டது.
நடிகை, நடிகர்கள் அவர்களின் நடிப்பில் வெளியான முதல் படங்களின் பெயர்களை தனது பெயருடன் இணைத்துக் கொள்வது வழக்கம். அவ்வாறே ஆனந்தி தன் நடிப்பில் வெளியான 'கயல்' படத்தை தனது பெயருடன் இணைத்துக் கொண்டு 'கயல் ஆனந்தி' என பெயர் மாற்றம் பெற்றார்.
இதன் பிறகு இவர் விசாரணை, சண்டிவீரன், பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது .
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் 'ராவணக்கோட்டம்' என்ற திரைப்படம் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட 'கயல்' இந்த இடம் ஜாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் எனது மகனுக்கு ஜாதி இல்லா சான்றிதழ் தான் வாங்கி இருக்கிறேன். இனி போக போக ஜாதிகள் இல்லாமல் அழிய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். தான் படித்த புத்தகங்கள் தான் இதற்கு காரணம் என்று சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியிருக்கிறார்.