மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்..! என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில் தனது உடல் எடையை குறைத்தது குறித்து கூறியுள்ளார். மிஸ் இந்தியா திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய அளவில் உடல் எடையை குறைந்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ளது "மிஸ் இந்தியா" திரைப்படம். மகாநதி படத்திற்கு பிறகு நான் அதிகம் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறேன். நான் நிறைய எடை குறைத்ததற்கு மிஸ் இந்தியா ஒரு காரணம். நான் மெலிதாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் என்னிடம் கூறியிருந்தார், அதனால் தான் உடல் எடையை குறைத்தேன் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.