மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இவரும் நடிச்சிருக்காரா.! நடிகர் நானி வெளியிட்ட புகைப்படம்.! கியூட்டான போஸ்ட்டால் பதிலளித்த கீர்த்தி சுரேஷ்!!
தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. அவர் தமிழிலும் வெப்பம், நான் ஈ போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவர் தற்போது ‘தசரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.
தசரா படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் நானி கையில் சிறிய கோழியை வைத்து அதனுடன் இணைந்து தான் படத்தில் நடித்திருப்பதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அதே கோழியை தனது கையில் வைத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து தன்னோடும் அவர் படத்தில் நடித்திருப்பதாக பதிலளித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி கவனம் ஈர்த்து வருகிறது.