"விஜய் மேடையில் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை" கீர்த்தி சுரேஷின் அதிர வைக்கும் வைரல் வீடியோ.?



Keerthy suresh talking about Vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தனது அழகாலும், நடிப்பு திறமையாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy

'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் காலடியெடுத்து வைத்த கீர்த்தி சுரேஷ், 'ரஜினி முருகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக அறியப்பட்டு வருகிறார்.

மேலும் இவரது சிறுவயது நண்பருடன் காதலில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் தந்தை உருக்கமான வீடியோ வெளியிட்டார்.

Keerthy

இது போன்ற நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, "இளைய தளபதி விஜய் நான் நடித்த 'மகாநதி' திரைப்படத்தை குறித்து என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து மிகவும் பாராட்டினார். அதோடு மட்டுமல்லாமல் மேடையிலும் என்னை பற்றி பெருமையாக பேசியிருந்தார். இளைய தளபதி இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கல என்று சந்தோசத்துடன் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.