மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கார் விபத்தில் சிக்கிய கேஜிஎப் பட நடிகர்! என்ன நடந்தது? அவரே வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் ஷாக்!!
கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பிரபலமடைந்த கன்னட நடிகர் பி.எஸ்.அவினாஷ் கார் விபத்தில் சிக்கி காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் கேஜிஎப். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. பான் இந்தியத் திரைப்படமாக வெளியான கேஜிஎப் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
இந்த படத்தில் நடிகர் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார்.அவர் அண்மையில் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சரியாக காலை 6.05 மணியளவில் குறைந்த நேரத்தில் ஏன் வாழ்க்கையில் நினைத்துப்பார்க்க முடியாத நிகழ்வு நடந்துள்ளது. நான் ஜிம்மை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகேயுள்ள சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது.
ஆனால் அந்த காலியான சாலையில் சிவப்பு சிக்னலைத் தாண்டி வேகமாக ஒரு கண்டெய்னர் லாரி வந்து என் கார் மீது மோதியது. அதன் பாதிப்பு எனது கார் பானட் கிழியும் அளவிற்கு இருந்தது. ஆனால் அந்த விபத்தில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, காருக்கு மட்டுமே கடுமையான சேதம் ஏற்பட்டது. கடவுளுக்கும் உங்கள் அன்பிற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.