#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அப்பாவி இளைஞரை ஆபாச படத்தில் மிரட்டி நடிக்க வைத்த பெண் இயக்குநர்...! சினிமா வட்டாரத்தில் பரபரப்பு..!?
கேரள மாநிலத்தில் இருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மலையாள இயக்குநர் லட்சுமி தீப்தா. இவர் ஷெலின்றே டியூஷன் கிளாஸ், பால் பாயாசம், நான்சி போன்ற வெப் சீரீஸ்களை இயக்கியிருக்கிறார். இந்த வெப் தொடர்கள் அனைத்துமே ஆபாச காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் வகையில் இயக்கியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருக்கும் வெங்கனூரைச் சார்ந்த இளைஞர் ஒருவர் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் லட்சுமி தீப்தாவை தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இதன்பின் நடிக்க அழைத்து செல்வதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அழைத்து சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு ஆபாசமாக நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.
மேலும், இதனை விரும்பாத அந்த இளைஞர் நடிப்பதற்கு மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த லட்சுமி தீப்தா ஒப்பந்தத்தை காட்டி மிரட்டி நடிக்கவில்லை என்றால் இழப்பீடு வழங்க நேரிடும் என்று கூறியுள்ளார்.இதனால் பயந்துபோன இளைஞர் வேறு வழியின்றி நடித்துள்ளார்.
இதன்பின், அந்த இளைஞர் உடனடியாக காவல் நிலையம் சென்று இயக்குநர் லட்சுமி தீப்தா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் "இயக்குநர் லட்சுமி தீப்தா தன்னை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளார். அந்த ஆபாச படங்கள் வெளியே வந்தால் என் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். எனவே லட்சுமி தீப்தா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து லட்சுமி தீப்தாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.