96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பார்ரா.. இந்த இளம் நடிகையும் இருக்காரா?? வெளிவந்த சந்திரமுகி 2 லேட்டஸ்ட் புகைப்படம்.! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பி.வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், மாளவிகா, வினித் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
சந்திரமுகி திரைப்படம் இன்றும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது சந்திரமுகி 2 பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது. இதில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகை ராதிகா, வடிவேலு, மஹிமா நம்பியார் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக ஒட்டுமொத்த பட குழுவினரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதில் நடிகை லட்சுமி மேனனை கண்ட ரசிகர்கள் இவரும் இப்படத்தில் நடித்துள்ளாரா என சர்ப்ரைஸ் அடைந்துள்ளனர். மேலும் சிலர் லோ பட்ஜெட் சந்திரமுகியா?? லட்சுமிமேனன்தான் நயன்தாரா ரோலில் நடிக்கிறாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.