"பேட் கேர்ள்" பற்றிய கேள்வி.. கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி.. "அரைவேக்காட்டுத்தனம்" என ஆவேசம்.!
லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் இடம்பெற்ற காட்சிகள் படப்பிடிப்பு நிறைவு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, தங்கதுரை, ஜீவிதா உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லால் ஸலாம்.
இந்த படத்தை லைகா ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்தின் படப்பிடிப்புகள் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் பகுதிகளில் நடந்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், அவரின் பாகங்கள் படமாக்கப்பட்டு வந்தன.
இன்றோடு அவரின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்தன. அதனை படக்குழு உறுதி செய்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் லால் ஸலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
SuperStar 🌟 Signs Off in Style! The team rejoices 🥳 as the shooting for #MoideenBhai's portion is wrapped! 🤗
— Lyca Productions (@LycaProductions) July 12, 2023
#LalSalaam 🫡
🌟 @rajinikanth
🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
💫 @TheVishnuVishal & @vikranth_offl
🎥 @DOP_VishnuR
⚒️ @RamuThangraj
✂️🎞️ @BPravinBaaskar
👕… pic.twitter.com/XsAdUKdOwP