மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாருமே எதிர்பார்க்கல.. லால் ஸலாம் படத்தில் ரஜினியின் அட்டகாசமான கதாபாத்திரம்: வீடியோ வெளியிட்ட படக்குழு.!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் லால் ஸலாம். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடித்து இருக்கிறார்.
நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில் தேவ், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர். படம் பொங்கல் 2024 பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு லால் ஸலாம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் பிரத்தியேக கதாபாத்திரத்தின் விடியோவை வெளியிட்டு இருக்கிறது.