மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லால் சலாம் படத்தின் இசை வெளியீடு எப்போது? விபரம் உள்ளே.!
விஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட பலரின் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது படம் வெளியீடுக்காக தயாராகி வருகிறது. லைக்கா ப்ரோடக்க்ஷன் தயாரித்து வழங்கும் லால் சலாம் திரைப்படம் ரஜினி ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. படத்தில் ரஜினிகாந்த் குறித்த காட்சிகளின் டீசர் வீடியோ ஒன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை ஒரு புறம் உற்சாகப்படுத்தினாலும், மறுபுறம் அங்கு யாரை எப்படி விமர்சனம் செய்யப் போகிறார்கள்? என்பது தொடர்பான எதிர்பார்ப்புக்காகவும் பலரும் காத்திருக்கின்றனர்.