திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
1 மாதத்திற்கு பிறகு சொந்த நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட லாஸ்லியா தந்தை உடல்! கண்கலங்க வைக்கும் இறுதிச்சடங்கு புகைப்படங்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்று மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஷ்லியா.அவர் தற்போது மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். இந்நிலையில் லாஷ்லியாவின் தந்தை மரிய நேசன் கனடாவில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் மரியநேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூட வதந்திகள் பரவியது. ஆனால் அவரது மரணம் இயற்கையே என மருத்துவவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் கொரோனா பிரச்சனையால், வெளிநாட்டில் இறந்த காரணத்தால் லாஸ்லியாவின் தந்தை உடலை அவரது சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு வருவது தாமதமானது.
இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மரியநேசனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் வருத்தத்துடன் லாஸ்லியாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.