திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இதெல்லாம் வதந்தி, யாரும் நம்பாதீங்க.! உண்மையை உடைத்த பிக்பாஸ் லாஸ்லியா!.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவருக்கென பெரும் ஆர்மி உருவானது. மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரும், நடிகருமான கவினுடன், காதல் வசப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற அவருக்கு அதனை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா தற்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்தநிலையில் லாஸ்லியாவிற்கு, அவரது பெற்றோர்கள் கனடாவை சேர்ந்த தங்களது நண்பனின் மகனுக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இதற்கு லாஸ்லியா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் இப்போதைக்கு திருமண பேச்சுக்கு இடமில்லை, இது முற்றிலும் வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.