திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிவகார்த்திகேயன் பெயரை ஒரே வீடியோவில் டேமேஜ் ஆக்கிய ஆண்டு இது.. சோகத்தில் ரசிகர்கள்.!
விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். 2012ம் ஆண்டு "மெரினா" படத்தில் அறிமுகமானார். இதையடுத்து "3" படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவையில் ஹீரோவாக நடித்தார்.
தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேவரைட் ஹீரோவாக உள்ளார்.
இந்நிலையில் இவரது ஆரம்பகால வளர்ச்சியில் இசையமைப்பாளர் டி. இமானின் பங்கு முக்கியமானது. இருவருமே அடிமட்டத்தில் இருந்து வந்ததால், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர். இந்நிலையில் இமான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சமீபத்தில் இமான் சிவகார்த்திகேயன் எனக்கு வெளியே சொல்ல முடியாத துரோகம் செய்துவிட்டார் என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார். ஆனால் எஸ் கே நல்லவர் என்ற கருத்துக்களும் வந்த நிலையில், இது சிவகார்த்திகேயனின் இணைய கூலிப்படை செய்யும் காரியம் என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறி மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.