பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
லவ்வுல டைட்டானிக் ஜாக்-அ மிஞ்சிடுவாரோ.. காதல் மன்னனாக களமிறங்கும் லெஜண்ட் சரவணன்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!
சரவணா ஸ்டோர்ஸ் கடை உரிமையாளரான அருள் சரவணன் நடித்த திரைப்படம் "லெஜன்ட் சரவணன்". இப்படத்தில் கதாநாயகியாக ஊர்வசி ரௌடெல்லா நடித்திருந்தார். லைகர் படத்தைவிடவும் இப்படம் வசூல் ரீதியாக ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்று கூறலாம்.
இந்த நிலையில் தி லெஜன்ட் எனும் ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படத்தினை தொடர்ந்து, அடுத்ததாக லெஜெண்ட் சரவணன் ரொமான்டிக் காதல் கதை படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இதற்காக இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.
தனது இரண்டாவது படத்தின் அறிவிப்பை வரும் தீபாவளி அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க லெஜென்ட் சரவணன் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் நீ நடத்து தலைவா, லவ்வுல டைட்டானிக் ஜாக்-அ மிஞ்சிடுவாரோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.