மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த படத்திற்கு தயாரான லெஜண்ட் சரவணன்; விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்த திரைப்படம் லெஜன்ட். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி வெளியானது.
இந்த படம் படக்குழு எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை என கூறினாலும், சரவணன் எப்படி நடித்திருக்கிறார் என்று காண்பதற்காகவே பலரும் தியேட்டர் சென்று படத்தை பார்த்தனர்.
இந்த நிலையில், தனது இரண்டாவது படத்திற்கான கதையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த சரவணன், தனக்கான கதையை தற்போது தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.