மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேர கேட்டா சும்மா அதிருதுள்ள.. 2 நாட்களில் மொத்த வித்தையையும் களமிறக்கிய லெஜண்ட் சரவணன்..!!
இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள் சரவணன் தயாரித்து, நடித்த திரைப்படம் தி லெஜெண்ட். இந்த படமானது கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கோபுரம் பிலிம்ஸ் சார்பாக விநியோகஸ்தர் அன்பு செழியன் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளார். இந்த நிலையில், கதாநாயகன் அருள் சரவணன் தவிற மற்ற அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் என்ற கருத்துக்கள் பெரும்பாலும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அண்மையில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, நடிப்பு என்பது பெரிய கஷ்டம் இல்லை. முதலில் கார் ஓட்டும்போது தடுமாற தான் செய்வோம். அது தானாகவே சரியாகிவிடும். அது போல தான் நடிப்பும், முதலில் இரண்டு நாட்களுக்கு எனக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை.
அதன்பின் ரொம்ப ஈசியாக வந்துவிட்டது என்று சர்வ சாதாரணமாக கூறினார். மேலும் பல வருடம் கஷ்டப்பட்டு, இயக்குனர்களிடம் திட்டு வாங்கி, நடிப்பு பயிற்சி மேற்கொண்டு சில நடிகர்கள் தங்களது நடிப்பை மெருகேற்றி வருகின்றனர். அப்படி இருக்கையில், எனக்கு இரண்டு, மூன்று நாட்களில் நடிப்பு சரளமாக வந்துவிட்டது என்று அண்ணாச்சி கூறிய கருத்து ரசிகர்களிடையே சிரிப்பலையை உண்டாக்கியுள்ளது.