மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லியோ முதல் காட்சி தமிழ்நாட்டில் இல்லையாம்! வேறு எங்கு தெரியுமா?! வெளியான தகவல்.!
அக்டோபர் 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் "லியோ". செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜயுடன் அர்ஜுன், திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், உலகளவில் பல நாடுகளிலும் வெளியாகப்போகும் லியோ திரைப்படத்தின் முதல் காட்சி வட அமெரிக்காவில் அதிகாலை 4 மற்றும் 6.40 மணிக்கு திரையிடப்படவுள்ளதாகவும், மேலும் பிரிட்டனில் காலை 5.10 மணி காட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகாலை 4 மணிக் காட்சிக்கு அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் அதிகாலை 4 மணிக் காட்சிக்கு தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படவில்லை என ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.