திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கைதி 2 படத்தின் கதை கார்த்தி வைத்திருந்த கட்டப்பையில்தான் இருக்கு! சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!என்ன தெரியுமா??
கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் கைதி. இதில் ஹீரோவாக கார்த்தி நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், நரேன், அர்ஜூன் தாஸ், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
தந்தை - மகள் பாசப் பிணைப்புடன் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு, வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான திரைப்படம்தான் கைதி. பாடல், ஹீரோயின் இல்லாவிட்டாலும் படம் மக்களைப் பெருமளவில் கவர்ந்து வசூல் ரீதியாகவும் ஹிட்டானது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது.
Wow @Karthi_Offl Anna is a Kabaddi player in #Kaithi2 #Kaithi pic.twitter.com/YTIByVfFaO
— The Karthi Team (@TheKarthiTeam) June 10, 2022
இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில், இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம், கைதி 2 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர், கைதி படத்தில் கார்த்தி கையில் ஒரு கட்டப்பை இருக்கும். அதில் கபடி விளையாடி ஜெயித்த கோப்பைகள் இருக்கும். அவர் ஒரு கபடி பிளேயர். ஜெயிலில் இருக்கும் போதும் நிறைய போட்டிகளில் வெற்றி பெற்று அவர் கப் வாங்கியிருப்பார். அதை வைத்தே கைதி 2 படத்தின் கதை தொடரும் என கூறியுள்ளார். இந்நிலையில் கைதி 2 படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.