மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. இதெல்லவா அன்பு! மனிதர்களையே மிஞ்சிய தவளை! மெய்மறந்து ரசிக்க வைக்கும் அரிய வீடியோ!!
கொட்டும் மழையில் பூவில் அமர்ந்தவாறு, ஒன்றை விட்டு ஒன்று நீங்காமல் அணைத்தவாறு அன்பை பரிமாறிக்கொள்ளும் தவளையின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் மெய் மறந்து ரசிக்கும் வகையிலும் அதே நேரத்தில் ஆச்சரியமூட்டும் வகையிலும் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகளின் க்யூட்டான மற்றும் திறமைமிக்க வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில் தற்போது ஜோடி தவளையின் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கவர்ந்துள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவ்வப்போது விலங்குகளின் சேட்டைகள் மற்றும் சுவாரசியமான பல வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். அவ்வாறு அவர் வெளியிடும் வீடியோக்கள் பெருமளவில் வைரலாகும். இந்நிலையில் தற்போது அவர் கொட்டும் மழையில் பூ ஒன்றில் அமர்ந்துள்ள தவளையின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
“The best thing to hold onto in life is each other.” –Audrey Hepburn 💕💕
— Susanta Nanda (@susantananda3) November 30, 2021
🎬 Ajarsetiadi pic.twitter.com/DAXiKWFOmk
வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வதுதான் சிறந்தது என பதிவிட்டு அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் இரு தவளைகள் நீண்ட நேரம் ஒன்றையொன்று நீங்காமல் பாதுகாப்பாக அணைத்துகொண்டவாறு, அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர். மனிதர்களின் அன்பையும் மிஞ்சிய இந்த வீடியோ பெருமளவில் பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் பலரும் இதனை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.