மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாரும் மறக்காம வந்துருங்க! நடிகர் மாதவன் வெளியிட்ட வீடியோ! என்ன விசேஷம்னு பார்த்தீர்களா!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கும் தொடர்ந்து தேர்தலில் ஓட்டு போடுவது குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகராக விளங்கிவரும் நடிகர் மாதவன் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் வைச்சுருக்கோம். மறக்காமல் வந்துடுங்க.
உங்க வீட்டு பக்கத்தில்தான். வந்து நல்லபடியாக ஓட்டு போட்டுட்டு போங்க. என்னடா கல்யாணத்துக்கு அழைக்கிற மாதிரி அழைக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? இது நம் நாட்டோட கல்யாணம்தாங்க. அதில் முக்கிய சிறப்பு விருந்தினரே நீங்கதான். அதனால் மறக்காமல் வந்துடுங்க. ஞாபகம் இருக்குல்ல ஏப்ரல் 6-ந்தேதி. 100 சதவீதம் வந்துடுங்க என கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.