மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாதவனின் வெப்சீரிஸ்! இந்த காட்சிதான் காரணம்! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அதனைத் தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாகவும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது மாதவன் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாகவுள்ள இந்த திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் மாதவன் Decoupled என்ற வெப்சீரிசில் நடித்துள்ளார். இது நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தையே
பெற்று வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
@ActorMadhavan 👌👌🤪 pic.twitter.com/az4EhO90gu
— Saru (@Saru27970518) December 19, 2021
அதில் மாதவன் அறை ஒன்றில் நுழைகிறார். அங்கே இஸ்லாமியர் ஒருவர் பிராத்தனை செய்து கொண்டுள்ளார். அவர் செய்வதை போலவே மாதவன் உடற்பயிற்சி செய்கிறார். இதை கண்ட அந்த நபர் இது பிரார்த்தனை கூடம், உடற்பயிற்சி செய்யக்கூடாது என கூறுகிறார். உடனே மாதவன் இந்து கடவுளை கும்பிடுவது போல செய்து சமாளிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அது மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்த காட்சியை தடை செய்யவேண்டும் எனவும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.