மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர்.. நடிகர் மகேஷ் பாபுவும் வாங்கிட்டாரா!! அதோட விலை எவ்வளவு தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. தமிழில் விஜய், அஜித்துக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருப்பது போன்று தெலுங்கில் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் ஏராளம். மகேஷ் பாபு நடிப்பில் தமிழில் வெளிவந்த ஸ்பைடர் திரைப்படம் செம ஹிட்டானது.
மேலும் அவருக்கு தமிழிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவானது. நடிகர் மகேஷ்பாபு தற்போது இந்தியாவின் விலையுயர்ந்த ஆடி இ-ட்ரான் என்ற எலக்ட்ரிக் எஸ்.யூ.வி ரக காரை புதிதாக வாங்கியுள்ளார். ஆடி இ-ட்ரான் வகை கார்கள் இந்தியாவில் ரூ.1.01 கோடி தொடங்கி ரூ.1.19 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக , எலக்ட்ரானிக் கார் ஒன்றை வீட்டிற்கு வரவேற்பதாகவும். சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத, நிலைத்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் ஆடி-ஈ-ட்ரான் எப்படி இருக்கும் என பயன்படுத்தவும், ஆடி காரின் அனுபத்தையும் பெறவும் ஆர்வமுடன் இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.