மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தயவுசெய்து அதனை தவிர்த்துவிடுங்கள்! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் மகேஷ்பாபு! எதனால் தெரியுமா?
தெலுங்கு சினிமாவில் ஏராளமான மெகாஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் மகேஷ்பாபு. டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ் பாபு ஆகஸ்ட் 9-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்த நிலையில் அவரது ரசிகர்கள் இணையதளங்களில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, வாழ்த்துக்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், உங்கள் அனைவரையும் நான் பெற்றதற்கு ஆசீர்வதிக்கப்பட்டவனாய் நன்றியுடன் இருப்பேன். என்னுடைய இந்த விசேஷமான நாளை மறக்க முடியாத நாளாக்க நீங்கள் செய்துவரும் அனைத்து நல்ல செயல்களையும் நான் அறிவேன்.
ஆனால் இந்த ஆண்டு உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடிய நோயை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பதால் நம் பாதுகாப்பு என்பது முக்கியமானது. அதனால் இந்தமுறை எனது பிறந்தநாளுக்காக பொது இடங்களில் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தயவுசெய்து தவிருங்கள். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.