மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாஸ்டர் பட நடிகையின் மோசமான செயல்.. நயன்தாராவை தொடர்ந்து அவமதிப்பு.?!
முன்னணி நடிகையான நயன்தாரா பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த கதாநாயகி ஆவார். இவர் மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கோலிவுட் திரையுலகில் ஐயா என்ற படத்தில் நடித்து பெயர் பெற்றார். அதன்பின்பு பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சில காலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த அறம், கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன், இமைக்கா நொடிகள் போன்ற கதாநாயகிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றியும் பெற்று பல விருதுகளையும் வாங்கி குவித்து வருகிறார். இவ்வாறு பல காரணங்களால் நயன்தாராவை, லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்பாக அழைக்கின்றனர்.
இத்தகைய நிலையில் நயன்தாரா இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரை சர்ச்சைகள் பின் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அப்படித்தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு வாடகை தாய் முறை மூலம் இவர் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இந்த வாடகை தாய் முறையை வைத்து பல சர்ச்சைகள் கிளம்பின.
மேலும், மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன், நயன்தாராவை பற்றிய விமர்சனங்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நயன்தாராவை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் நேரத்திலும் முழுமையாக மேக் அப்புடன் ஒரு படத்தில் நடித்திருப்பதாக நக்கலாக கூறினார். இதற்கு விளக்கம் அளித்த நயன்தாரா அது கமர்சியல் பீலிம் அந்த படத்திற்கு அவ்வளவு சோகமான மேக்கப் தேவையில்லை என்று டைரக்டர் கூறினார். டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்க முடியும் என்று நயன்தாரா மற்றொரு பேட்டியில் விளக்கமளித்தார்.
இதன் பின்பும் மாளவிகா மோகனன், நடிகைகளை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட தேவையில்லை. ஆலியா பட், தீபிகா படுகோன் ஆகியோரும் சூப்பர் ஸ்டார் தான். நயன்தாராவை மட்டும் ஏன் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இவ்வாறு அவர் கூறியது பொறாமையின் வெளிப்பாடு என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.