ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குளிருக்கு இதமாய் ஹாட் புகைப்படங்களுடன் மாநாடு பட நாயகி!
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். சினிமாவில் புரொடக்ஷன் பணிகளில் தனது வாழ்வை துவக்கிய இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஹலோ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது தென்னிந்திய சினிமா திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான வாரானு அவசியமுண்டு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு மலையாள சினிமாவில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மாநாடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சென்னையை வசிப்பிடமாக கொண்ட இவரது பூர்வீகம் கேரளா. தனது பள்ளிக் கல்வியை சென்னையில் முடித்த இவர் அமெரிக்காவில் வடிவமைப்பு துறையில் உயர்கல்வி கற்றவர். சினிமாவில் சிறிது காலம் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு துறைகளில் வேலை செய்த இவர் ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் சேஷம் மிக்கெல் பாத்திமா என்ற மலையாள படம் படப்பிடிப்பில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வான் என்ற தமிழ் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார் இவர்.
சமூக வலைதளங்களில் எப்போதுமே தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் அப்லோடு செய்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் காதலர் தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்ல அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களும் வரவேற்பு அளித்து அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.