மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாகும் இரண்டு இளம் நடிகைகள்... யார் யார் தெரியுமா.?
பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். ஆனால் லெஜண்ட் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இல்லை எனவே பெரிய வசூலும் பெறவில்லை. தி லெஜண்ட் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு ஹாட்ஸ்டாரில் வெளியானது.
அடுத்ததாக லெஜண்ட் சரவணன் எந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்போது லெஜண்ட் சரவணன் தன்னுடைய கடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் லெஜண்ட் சரவணனுடன் இணைந்து விஜய் டிவி புகழ் மணிமேகலை மற்றும் குக் வித் கோமாளி ஸ்ருத்திகா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் லெஜண்ட் உடன் இருக்கும் போட்டோவை மணிமேகலை வெளியிட்டு இருக்கிறார்.