மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய காதல் ஜோடி.! நடிகர் கெளதம் கார்த்திக்கிற்கு அந்த சிம்பு பட நடிகையோட திருமணமா? தீயாய் பரவும் தகவல்!!
தமிழ் சினிமாவில் 2016ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களின் மனதை பெருமளவில் கொள்ளை கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம், இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது மஞ்சுமா மோகன் எப்.ஐ.ஆர். என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தேவராட்டம் படத்தில் நடித்தபோது மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க துவங்கியதாகவும், மேலும் இரு வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறவிப்பும் வெளிவரவில்லை.