மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரொம்ப குண்டாயிட்டீங்க.! உருவக்கேலி செய்த நெட்டிசன்ஸ்! சரியான பதிலடி கொடுத்த பிரபல இளம்நடிகை!!
தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அதனைத் தொடர்ந்து அவர் சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மஞ்சிமா மோகன் தற்போது சற்று உடல் எடை அதிகரித்துள்ளார். இதனால் அவரை பலரும் உருவக்கேலி செய்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அண்மையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அப்பொழுது சிலர், நீங்கள் ரொம்ப குண்டாகிட்டீங்க, உடம்பை குறைக்காவிட்டால், உங்களால் சினிமாவில் முன்னுக்கு வரமுடியாது எனக் கூறியுள்ளார். அதற்கு மஞ்சிமா, “நமது சினிமாதுறை வெறும் புற அழகை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்பது இவ்வளவு நாள் எனக்கு தெரியலையே. உங்கள் தகவலுக்கு நன்றி என பதில் அளித்துள்ளார். மேலும் மற்றொருவர், 'ஓவர் வெயிட்… பாவம் அந்த பையன்' எனக் கூற அவருக்கு மஞ்சிமா “எனது எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அக்கறைக் கொண்ட நபர்” என நக்கலாக பதில் அளித்துள்ளார்.