மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரவணன் மற்றும் மதுமிதாவை பற்றி வெளியான புதிய தகவல்! வைரலாகும் புகைப்படம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். அதில் பருத்திவீரன் சித்தப்பான சரவணனும், காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதேபோல் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் வெளியேற்றப்பட்டார்.
அதன் பிறகு நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கொண்டத்தில் கூட இருவரும் கலந்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள் இருவரை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மதுமிதா மற்றும் சரவணன் இருவரும் இணைந்து வீட்டு மனை விற்பனை விழாவிற்கு தலைமை தாங்கியுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.