#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சீரியல் ஹீரோவாக அறிமுகமாகும் மயில்சாமி மகன்.. எந்த டிவி தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் மயில்சாமி. இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீர் மாரடைப்பால் காலமானார்.
இவரது இறப்பு தமிழ் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களின் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மயில்சாமி மகன் சீரியலில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
அதன்படி விஜய் டிவியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் தங்கமகள் என்ற சீரியலில் யுவன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்த சீரியலில் தலைவாசல் விஜய் வினோதினி காயத்ரி ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த சீரியலை ஹரிஷ் ஆதித்யா என்பவர் இயக்குகிறார்.