மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கமல் படமா.? முத்த காட்சியில் மட்டும் நடிக்கவே மாட்டேன்" இயக்குனரிடம் கண்டிப்பாக கூறிய மீனா..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் கமலஹாசன். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார் கமலஹாசன்.
இது போன்ற நிலையில் 1996 ஆம் வருடம் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இப்படத்தில் ஜெமினி கணேசன், மீனா, கே எஸ் ரவிக்குமார், நாசர் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.
மிகப்பெரும் வெற்றியடைந்த இப்படத்தை குறித்து சமீபத்தில் படத்தின் கதாநாயகியான மீனா பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் கமலஹாசன் படம் என்றதும் ஆர்வத்தில் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே படத்தில் முத்த காட்சி இருக்கிறது என்று உதவி இயக்குனர் என்னிடம் வந்து கூறினார்.
மேலும் இதைக் கேட்டதும் எனக்கு பதட்டம் ஆகிவிட்டது. இதனால் இயக்குனரிடம் முத்த காட்சியில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறி அனுப்பி இருந்தேன். பின்பு அவர் வந்து முத்த காட்சி எல்லாம் இல்லை என்று கூறிவிட்டார். அதன் பிறகு தான் எனக்கு நிம்மதியே வந்தது என்று மீனா பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.