திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னால் டார்ச்சர் தாங்க முடியவில்லை! நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன்!! பிரபல பிக்பாஸ் நடிகை சொன்ன காரணம்....
மாடல் அழகியான மீரா மிதுன் கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் 3 மூலம் வெளி உலகிற்கு மிகவும் பிரபலமானார். அதற்கு முன்னதாக இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சில் இவரது செயல்பாடுகள் பலரையும் எரிச்சலடைய செய்தது. இதனால் இவர் விரைவில் வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் இவர் பற்றிய பல்வேறு சர்ச்சைகள் , புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது.
இந்நிலையில் தற்போது, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மீரா மிதுன், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அஜித் ரவியின் அமைப்பை விட்டு விலகினேன். அந்த அமைப்புக்காக நான் வேலை செய்து, அழகிப் பட்டம் வென்றேன். அஜித் ரவி செய்த அநீதியால் அந்த அமைப்பை விட்டு விலகி என் சொந்த அமைப்பை உருவாக்கினேன்.
அஜித் ரவி என் பெயரை கெடுத்துவிட்டார். என் மீது பொய் வழக்குகள் தொடர்ந்தார். சைபர் புல்லியிங் செய்தார். தன் அதிகாரம் மற்றும் பணத்தை வைத்து எனக்கு பிரச்னைகள் கொடுத்தார். அவர் என்ன செய்தாலும் அதில் இருந்து நான் மீண்டு வந்தேன். அவர் என்னை பின்தொடர்கிறார், என் வேலையை கெடுக்கிறார், என் ப்ராஜெக்டுகள் ரிலீஸாவதை தடுக்கிறார், என் குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்துகிறார். 3 ஆண்டுகளாக அவர் என்னை டார்ச்சர் செய்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் கிரிமினல்களை வைத்து கொடுமைப்படுத்துகிறார். அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. ஆனால் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.
ஷூட்டிங் மற்றும் இந்த துறையில் ஜொலிப்பதே என் விருப்பம். ஆனால் அஜித் ரவியால் நான் பிரச்னைகளை எதிர்கொள்வதால் மன அழுத்தத்தில் இருக்கிறேன். தற்கொலை தான் எனக்கு இருக்கும் ஒரே வழி. என் தற்கொலைக்கு அஜித் ரவி மட்டும் தான் காரணம். சுஷாந்த் சிங் ராஜ்புட் போன்று நான் இறந்த பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும். இது தற்கொலை அல்ல கொலை என குறிப்பிட்டு இருக்கிறார் .